பிசினஸ் சீக்ரெட்ஸ்

Published by Amri 09 Jul 11:55 am Kandy, Kandy

Rs 200

பிசினஸா... எனக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்... அதைப் பற்றி எனக்குத் தெரியாது... எனக்கு சப்போர்ட் பண்ண யாரும் இல்லை...’ என்ற எண்ணம் கொண்டிருப்பவர்கள் இந்த நூலைப் படித்த பிறகு அப்படிச் சொல்லவே முடியாது.
முதலில் என்ன பிசினஸ் செய்யலாம் எனத் தேர்ந்தெடுத்து பின் அதை எந்த இடத்தில் அமைக்கலாம்... அதற்கு முதலீடு செய்ய என்னென்ன தேவை என்பதை ஆராய்ந்து, திட்டமிட்டு, எளிமையான முறையில் கையாளும்பட்சத்தில் குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தைப் பெறும் உத்திகளைப் பற்றி இந்த நூல் தெளிவாகக் கற்றுக்கொடுக்கிறது.
என்ன தொழில் செய்ய வேண்டும்? அதில் எது நமக்கு ஏற்றதாய் இருக்கும் எனக் கண்டுபிடித்து அதை எப்படி ஆரம்பிக்க வேண்டும்? தொழிலாளர்களை எப்படி நியமிக்க வேண்டும்? பிசினஸில் ஏற்படும் தடைகளையும் தவறுகளையும் எப்படி எதிர்கொண்டு முன்னேற்றம் அடைய வேண்டும்? பிசினஸுக்காக முதலீட்டுப் பணம் எப்படிப் பெறுவது? அதற்கான திட்டங்கள் என்ன? போன்ற நுணுக்கமான வழிமுறைகளை எடுத்துரைத்திருப்பது இந்த நூலின் சிறப்பு.
பிசினஸ் செய்வதில் குறுக்குவழி கூடாது; அதனால் சந்திக்க நேரிடும் விளைவுகள்... வருமான வரி செலுத்துவதன் அவசியங்கள்; அதனால் கிடைக்கும் மரியாதை... வங்கி அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படுதல்; இதனால் கூடுதல் கடன் கிடைக்கக்கூடிய வாய்ப்பு... போன்ற பிசினஸ் சீக்ரெட்ஸ்களை பக்குவமாகச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர்
சி.கே.ஆர்.
நாணயம் விகடனில் தொடராக வெளிவந்த பிசினஸ் சீக்ரெட்ஸ், நூல் வடிவம் பெற்றிருக்கிறது. சிறந்த ஆலோசனைகளையும் ஆக்கப்பூர்வமான அறிவுரைகளையும் பெற்று, உங்கள் பிசினஸில் நீங்கள் வெற்றிபெற, பக்கங்களைப் புரட்டுங்கள்... பிசினஸில் வெல்லுங்கள்!

Contact

Books & magazines
Condition: New
Textbook / Magazine type: Other
For Sell
Kandy, Kandy
Save ad as favorite

Do you have something to sell?

Post your ad on winwin.lk

Post your ad now